6 மாதங்களாக நீடித்த தலைவலி: 8 வயது சிறுமியின் மூளையிலிருந்த 100 நாடாப்புளு முட்டைகள்

இந்தியா, டெல்லியில் தலைவலியால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்த வைத்தியர்கள் நூற்றுக்கணக்கான நாடாப்புளு முட்டைகள் இருப்பதை பார்த்து அதிர்சியடைந்தனர்.


6 மாதங்களாக தலைவலியால் பாதிக்கப்பட்ட லீமா என்ற சிறுமியை வைத்தியர்கள் சோதித்து பார்த்தபோது தலையில் வீக்கம் இருந்த காரணத்தினால் ஸ்கேன் செய்து பார்த்ததில் லீமாவின் மூளைக்குள் நூற்றுக்கணக்கான முட்டைகள் இருந்திருக்கின்றன.


ஏற்கனவே அவருக்கு மூளையில் இருந்த வீக்கம் இருந்த காரணத்தால் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டதில் சிறுமியின் உடல் எடை 40 கிலோவாக அதிகரித்தது.


அதன் பின்னர், உடல் எடை அதிகரித்து நடப்பது மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.


லீமாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதில் நியூரோ சிஸ்டிக் சிரோஸிஸ் (neuro cystic sarcosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.


பின்னர், லீமாவின் மூளைக்குள் நூற்றுக்கான வெள்ளை நிறப் புள்ளிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை நாடாப்புளுக்களின் முட்டைகள் எனவும், அதன் அழுத்தமானது மூளையை பாதித்துள்ளது. இதனால் முதலில் மூளையில் அழுத்தம் குறைவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு, பின்னர் கட்டி போல இருந்த முட்டைகளைக் கொல்வதற்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன.


மூளையில் உள்ள நாடாப்புழுக்களின் முட்டைகளை அழிப்பதற்கு மருந்து கொடுப்பது இன்னும் கூடுதல் சிக்கல்களையே கொடுக்கும், அவை வலிப்பு மற்றும் மூளை பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தும் என்பதால் மெதுவாக சிகிச்சை அளித்து வருகின்றனர் வைத்தியர்கள் .


இவ்விடயம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

[facebook]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget