பிரதான செய்திகள்


பாராளுமன்றில் இருக்கும் 226 பேரும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்களது ஒருமாத சம்பளத்தை தியாகம் செய்ய முன்வரவேண்டும்.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது ஒரு மாத சம்பளத்தை தியாகம் செய்கின்றேன். அதேபோல் ஜனாதிபதி உட்பட பாராளுமன்றில் இருக்கும் 226 பேரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தியாகம் செய்ய முன்வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.


கம்பெரலிய செயற்றிட்டத்தினூடாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் மேற்கொள்ளப்பட்ட நிதியோதுக்கீட்டின் கீழ் இப்பொலோகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பலளுவெவ ஜும்மா பள்ளியின் மேல்மாடிக்கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றது. குறித்த வேலை தளத்திற்கு நேரடியாக சென்று மேற்பார்வை செய்த பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு அங்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை புற்று நோய் மருத்துவமனைக்கு தேவையான 100 கோடி ரூபாய் பெறுமதியான இயந்திரங்களை கொள்வனவு செய்து குறித்த மருத்துவமனைக்கு வழங்குவதற்காக நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் ஒன்றிணைந்து அதற்கான நிதியினை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிய நான் அனுராதபுர மாவட்டத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது பாராளுமன்ற சம்பளத்தை ஒதுக்கி வருகின்றேன். எனது ஒரு மாத சம்பளத்தின் அளவை எனது சொந்த நிதியிலிருந்து புற்று நோய் வைத்தியசாலைக்கு தேவைப்படும் அந்த இயந்திரத்தினை கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கீடு செய்கின்றேன்.

அதேபோல் என்னோடு பாராளுமன்றில் இருக்கும் ஜனாதிபதி உட்பட 226 பேரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்களும் இதுபோன்று உங்களது ஒரு மாத பாராளுமன்ற சம்பளத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தியாகம் செய்ய முன்வரவேண்டும்.

அதேபோல் நாட்டின் பல பாகங்களிலும் வசிக்கும் சகல இன மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன். இன, மத, குல பேதங்களை மறந்து எமது நாட்டு மக்களை பாதுகாப்போம் என்ற எண்ணத்தோடு தங்களால் முடிந்த அளவு உதவியினை இப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்ய முன் வாருங்கள். எமது இச்செயற்பாட்டால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. என தெரிவித்தார்.புதுடெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்று பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸை மும்பை இண்டியன்ஸ் அணி நேரடியாக எதிர்கொண்டது. டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோகித் சர்மாவும் 35 ரன்னும் டி காக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதில் ரோகித் சர்மா, டி காக் இருவரும் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இதையடுத்து ஆடிய ஹர்திக் பாண்ட்யாவும் குணால் பாண்ட்யாவும் அதிரடியாக ஆடி பட்டையைக் கிளம்பினர். ஹர்திக் பாண்ட்யா 32 ரன் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க குணால் பாண்ட்யா 37 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் சரியான முறையில் ஆட்டத்தைத் தொடங்கிய பிருத்வி ஷாவும் ஷிகர் தவானும் சிறப்பாக ஆடினர். அதில் பிருத்வி ஷா 20ரன்னும், ஷிகர் தவான் 35 ரன்னும் எடுத்தனர். ஆனால் அவர்களைத் தொடர்ந்து ஆடிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்தது. 

இதனால் மும்பை அணி 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை மும்பை அணி ஆடிய 9 போட்டியில் இது அந்த அணியின் 6 வது வெற்றியாகும். 


நாவலபிட்டி கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில்
இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கம்பளை பகுதியை சேர்ந்த 18 வயதான மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 3.00 மணியளவில் தனது காதலியுடன் குறித்த மாணவர் அங்கு நீராட சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது அவர்கள் இருவரும் நீராடும் வேளை அந்த மாணவர் திடீரென நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணால் போயுள்ளார்.

மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு இருவரும் குறித்த நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்துள்ள மாணவனின் சடலத்தை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

பொலன்னறுவை-மட்டக்களப்பு எல்லையில் வெலிக்கந்தையை அண்மித்துள்ள
மீள்குடியேற்றக் கிராமமான கள்ளிச்சைக் கிராமத்தில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் சமூக சேவை நிறுவனமான செரெண்டிப் பெளண்டேஷனால் (SFRD) நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாயல் நேற்று 19.04.2019ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில், பிரதம அதிதியாக விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.


ஏனைய அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.றபீக், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உதவித்தவிசாளர் யூ.எல்.அஹ்மத் லெப்பை, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பி.எம்.ஜெளபர், ஏ.ஜி.அமீர், எம்.சலீம், Dr.அப்தாப் அலி ஆகியோரும் மற்றும் பலரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

குறித்த பள்ளிவாயலை நிர்மாணித்து வழங்கிய செரெண்டிப் பெளண்டேஷனுக்கு (SFRD) இப்பிரதேச மக்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இக்கிராமத்திற்கு தேவையான மின்சாரப்பிரச்சினை, வீீீீதிகள் பிரச்சினை , குடிிநீர் வசதி போன்ற ஏனைய அடிப்படை வசதிகளையும் குறித்த நிறுவனமும் அரசியல்வாதிகள், ஏனைய தொண்டு நிறுவனங்களும் செய்து தரவேண்டுமென்ற வலுவான கோரிக்கையினையும் முன்வைக்கின்றனர்.

Mohamed Bin Latheef
madawalaenews

கடும் மழை.. மின்னல் தாக்குதலில் ஒருவர் பலி. மரங்களிலும் இடி விழுந்தன.

முல்லைத்தீவு – விசுவமடு, புத்தடி பகுதியில், இன்று மாலை 3 மணியளவில், மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், தொட்டியடி - விசுவமடுவைச் சேர்ந்த 18 வயதுடைய தர்மபாலசிங்கம் தயானந்தன் எனவும், காயமடைந்தவர், 24 வயதான கணேசமூர்த்தி கிரிசன் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் குளிக்கச் சென்றிருந்த போது, மரத்தடியில் நின்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, மின்னல் தாக்கியுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்திற்கு இலக்கான மற்றுமொரு இளைஞர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம், வலிகாமத்தின் பல இடங்களில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் காற்று வீசியதுடன், இடியுடன் கூடிய மழை ஆரம்பித்தது.

இதன்போது, யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் சிவன் அம்மன் கோவிலடியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும் சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படை தீயை அணைத்தது.

இலங்கையில் புற்றுநோயை இல்லாமல் செய்வதற்கான இயந்திரக்கொள்வனவுக்கு
(Tomo therapy, linear Accelerators ) தேவை சில 100 கோடிகள் மாத்திரமே. ஆனால் இலங்கை அரசாங்கத்தால் மோசடி செய்யப்பட்ட அதேபோல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற மோசடிகள் பல 1000 கோடிகள்.


அரசியல் அதிகாரம் என்ற ரீதியில் மத்திய, மாகாண, உள்ளூராட்சி தாபணங்களில் திட்டமிடப்படாத அபிவிருத்திகளாலும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழல் மோசடிகளாலும் இலங்கையில் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் மோசடி செய்யப்பட்டு வீண்விரயம் செய்யப்படுவதை இலங்கை நாட்டுப் பிரஜைகள் என்ற அடிப்படையில் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற வலுவான நிலையே இருக்கின்றன.


கடந்தகால இலங்கை அரசாங்கத்தின் மத்திய வங்கி கொள்ளை இன்றுவரை தீர்வு எட்டப்படாத ஒன்றாகவே காணப்படுகி்றது. பல பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கைகளும் ஆதாரங்களும் மிகத் தெளிவாக இருந்தபோதிலும் நடைபெற்ற பகற்கொள்ளையால் இன்று இந்த நாட்டு மக்கள் புற்றுநோய்க்காக கையேந்துகின்றனர் என்ற இந்த துரதிர்ஷ்ட நிலையை இலங்கை அரசாங்கம் இதயசுத்தியுடன் இந்த நாட்டு மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தங்களது நெஞ்சில் கைவைத்துப்பார்க்க வேண்டும்.


எமது நாட்டின் கடந்த சில மாதங்களாக நாம் அவதானித்த "உப்புச்சப்பில்லாத" பாராளுமன்ற அமர்வுகளுக்கு செலவு செய்யப்பட்ட பணம் வீணானதே. அதில் பயன்படுத்தப்பட்ட மிளகாய்ப் பொடி மாத்திரமே செலவு செய்யப்பட்டதில் குறைவான தொகையைக் கொண்டது. 


அபிவிருத்தி என்ற போர்வையில் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற பல அபிவிருத்திகள் இடைநடுவில் கைவிடப்படுவதும், மோசடி செய்யப்பட்டு தரமற்றுப்போவதும், பயன்படுத்தப்படாத கட்டடங்களுக்கு அரசாங்கம் வாடகை செலுத்துவதும் என்று பல விடயங்களை நாம் அடிக்குக் கொண்டே போகலாம்.....


அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்து விட்டு நடுவீதியில் நின்று யாசகம் கேட்பதை தவிர்த்துவிட்டு பாராளுமன்ற கட்டடத்திற்கு முன்பாக போய் யாசகம் கோட்போம் வாருங்கள். 


[MLM.சுஹைல்]

இந்தியாவில் தூக்கம் குறித்து இளைஞர்களிடம் சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. தூக்கத்தின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை சுகாதார தொழில்நுட்பத்தின் சர்வதேச தலைவர் ராயல் பிளிப்ஸ் வெளியிட்டுள்ளார்.

அதில், 73 சதவீதம் பேர் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த ஆவலாக உள்ளதாகவும், 55 சதவீதம் பேர் நிம்மதியாக தூங்குவதாகவும் கூறியுள்ளது தெரிய வந்துள்ளது. 

இதில் 38 சதவீத இளைஞர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தங்களின் தூக்கம் மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 31 சதவீதம் இளைஞர்கள் தூக்கத்தினை அதிகரிக்க யோகா செய்வதாக கூறியுள்ளனர். மேலும் டெல்லி (47%), மும்பை(84), பெங்களூர்(88), லக்னோ(70%) என குறிப்பிட்ட இடங்களில் தூக்கத்தின் அளவு குறைந்து காணப்படுகின்றது. 


இந்தியாவில் தூக்கத்தின் ஆரோக்கியம், முக்கியத்துவம் மற்றும் சதவீதத்தினை அதிகரிக்க பிலிப்ஸ் முயற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் பல்வேறு நாடுகளிலும் 500க்கும் மேற்பட்ட தூக்கத்திற்கான ஆய்வுக் கூடங்களையும், 400 தூக்கத்தில் சிறந்த பயிற்சியாளர்களையும் உருவாக்கியுள்ளது. 

இந்தியா மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 11,006 பேரிடம் இது குறித்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நான் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், தோனியைப் பொறுத்தவரை நான் ஒரு முதலுதவிப்பெட்டிதான். அவர் காயத்தால் அணியில் இல்லாத நிலையில்தான் அணிக்குள் நான் செல்ல முடியும் என்று உருக்கமாகத் தெரிவித்தார் தினேஷ் கார்த்திக்.

இங்கிலாந்தில் மே மாத இறுதியில் நடைபெறும் உலகக்கோப்பைப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ கடந்த 2 நாட்களுக்கு முன் அறிவித்தது.

தவறவிடாதீர்
வருத்தப்பட ஒன்றுமில்லை.. ஐபிஎல் ஒரு வர்த்தகம்: திடீரென தன்னை அழைத்தது குறித்து டேல் ஸ்டெய்ன் கருத்து

தோனி இந்திய அணிக்குள் அறிமுகமாவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அணிக்குள் அறிமுகமான தினேஷ் கார்த்திக், 2007-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குபின் ஏனோ அதன்பின் நடந்த இரு உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை.

கிடைத்த வாயப்புகளை சிறப்பாக பயன்படுத்திய தோனி, அடுத்தடுத்து உயர்ந்து அணியின் கேப்டனாக உயர்ந்தார், அவர் தலைமையில் இரு உலகக்கோப்பையை இந்திய வென்றது.

அதேபோல, இந்திய அணியிலும் தோனி இருக்கும்வரை மாற்று விக்கெட் கீப்பர் குறித்து யாரும் தேர்வு செய்யப்படாத சூழல்தான் நிலவி வந்தது. தோனி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றபின் அவரின் இடத்தை விருதிமான் சாஹா நிரப்பத் தொடங்கினார், அவ்வப்போது மட்டுமே தினேஷ் கார்த்திக் அணிக்கு வந்து சென்றார்.

இந்நிலையில், 6 ஆண்டுகளுக்குப்பின் 2017-ம் ஆண்டு மீண்டும் ஒருநாள் அணிக்குள் வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக், வரும் மே மாதம் உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனாலும், தோனிக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளாரேத் தவிர முழுநேர விக்கெட் கீப்பராக இடம் பெறவில்லை

தினேஷ் கார்த்திக் : படம் உதவி ட்விட்டர் 

இதகுறித்து தினேஷ் கார்த்திக் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

2017-ம் ஆண்டு இந்திய அணியில் நான் மீண்டும் இடம் பெற்றபின், இப்போது, உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் பயணத்தில் நான் இடம் பெற்றுள்ளேன். உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளதால் அணிக்காக ஏதேனும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.

என்னிடம் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் பேசினார். அப்போது, எனக்கும், ரிஷப் பந்துக்கும் சரிசமமான வாய்ப்புகள் தரப்படும் என்றார். நியூசிலாந்து, ஆஸ்திரேலியாத் தொடரில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், இந்தியாவில் நடக்கும் ஆஸ்திரேலியத் தொடரில் ரிஷப்பந்துக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெளிவாகக் கூறினார். இந்த தெளிவான விளக்கத்தை நான் வரவேற்றேன், மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால், உலகக்கோப்பைப் போட்டியில் நான் இந்திய அணியில் இடம்பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும், தோனிக்கு நான் மாற்றுதான். தனிப்பட்ட முறையில் எனக்கு விக்கெட் கீப்பிங் பணி கொடுத்தால் அதை சிறப்பாகச் செய்வேன்.

தோனியைப் பொறுத்தவரை நான் ஒரு சிறிய முதலுதவிப் பெட்டியாகவே அணியுடன் உலகக் கோப்பைப் போட்டிக்கு பயணிக்கிறேன். தோனிக்கு காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால் மட்டுமே நான் அணியில் இடம் பெற முடியுமேத் தவிர மற்றபடி இல்லை.

என்னால் 4-ம் இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாட முடியும். ஐபிஎல் போட்டிக்குபின், நான் தினமும் பயிற்சி எடுத்து நான் முழுமையாக பேட்ஸ்மேன் என்பதை முன்னர் நிரூபித்ததுபோல் செய்வேன்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

தொடர்ந்து 6 தோல்விகளை பெற்ற பெங்களூரு அணி, 7-வது போட்டியில் வெற்றி கண்டது. ஆனால் 8-வது ஆட்டத்தில் மீண்டும் தோல்வி கண்டது. இதனால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது.

இதனால் கொல்கத்தாவுடனான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு அணி உள்ளது.

பெங்களூரு அணியின் பேட்டிங் விராட் கோலி, பார்த்தீவ் பட்டேல், காலின் இங்கிராம், டிவில்லியர்ஸ், மொயின் அலி, சிவம் துபே என வலிமையாக உள்ளது.

அதைப் போலவே பவுலிங்கில் உமேஷ் யாதவ், யுவேந்திர சாஹல், டேல் ஸ்டெயின், டிம் சவுதி போன்ற ஜாம்பவான்களைக் கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் பட்சத்தில் கொல்கத்தாவை பெங்களூரு வெல்வதற்கான வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா வீரர் ஆந்த்ரே ரஸ்ஸல், பெங்களூரு பவுலர்களை மிரட்டக் காத்திருக்கிறார். இந்தத் தொடரில், சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்து வருகிறார் ரஸ்ஸல். ஆனால் கடந்த ஆட்டத்தின்போது ரஸ்ஸல் காயமடைந்தார். அவர் விளையாடும்பட்சத்தில் அவரது ஆட்டம் நிச்சயம் பெங்களூரு அணிக்குத் தலைவலியாக அமையும்.

பெங்களூருடனான கடந்த லீக் போட்டியின்போது அவர் 13 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்ஸர்களை ரஸ்ஸல் பறக்கவிட்டது நினைவிருக்கலாம்.

பெங்களூருடனான ஆட்டத்தில் ரஸ்ஸல் விளையாடுவாரா என்பது இதுவரை தெரியவில்லைபேட்டிங்கில் தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், சுனில் நரேன், சுப்மான் கில், நித்திஷ் ராணா ஆகியோரை நம்பியுள்ளது கொல்கத்தா. அதைப் போல பவுலிங்கில் பிரஷித் கிருஷ்ணா, ஹாரி கர்னி, குல்தீப் யாதவ், சுனில் நரேன், பியுஷ் சாவ்லா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

திடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல் துஷ்பிரயோகங்கள் உட்பட திடீர் அனர்த்தங்களுக்கு அரச பாதுகாப்புத் துறையினரிடம் உடனடி பிரதிபலனைப் பெற்றுக்கொள்ள புதிய அப் (Emergency App) ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 


அதன்மூலம் உடனடி அம்பியூலன்ஸ் சேவை, தீயணைப்புச் சேவை, பொலிஸ் சேவை உட்பட அரச பாதுகாப்பின் அனைத்துச் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். 


தொலைத்தொடர்பு மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சில் )நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 


அவர் மேலும் தெரிவித்ததாவது, 


திடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல் துஷ்பிரயோகங்கள் உட்பட அவசர பிரச்சினைகளுக்கு உள்ளானோர்அரச பாதுகாப்புத் துறைக்கும் அறிவிக்கும் பொறிமுறையில் உள்ள குறைபாடுகளை புரிந்துகொண்டு அதற்கான தீர்வை முன்வைக்க நடவடிக்கையெடுத்துள்ளோம். 


தமக்கு ஏற்பட்ட விபத்து தொடர்பில் பொலிஸாருக்கும், இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கும், அம்பியூலன்ஸ் சேவைக்கும் அறியப்படுத்தும் காலம் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் காலம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.


1990அம்பியூலன்ஸ் சேவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. தொலைப்பேசி அழைப்பு விடுத்து 12நிமிடங்களுக்குள் குறித்த அம்புலன்ஸ் சேவையை விபத்துக்கு உள்ளான நபர் பெற்றுக்கொள்கிறார்.


(சுப்பிரமணியம் நிஷாந்தன்)

வங்காளதேசத்தில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டை வாபஸ் பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 


வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய நகரம் பெனி. இந்த நகரை சேர்ந்த நஸ்ரத் ஜகான் ரபி (வயது 19) என்ற மாணவி அதே பகுதியைச் சேர்ந்த தனியார் பாடசாலையில் படித்து வந்தார்.


இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் பாடசாலையின் தலைமை ஆசிரியர் தன்னை அவரது அறைக்கு அழைத்து தவறான எண்ணத்தில் தொட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நஸ்ரத் ஜகான் ரபி போலீசில் முறைப்பாடு செய்தார்.


அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமை ஆசிரியரை கைது செய்தனர். இதையடுத்து அந்த பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் சிலரும், உள்ளூர் அரசியல்வாதிகளும் இணைந்து, தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நஸ்ரத் ஜகான் ரபி பொய்யான முறைப்பாடு அளித்துள்ளதாக குற்றம் சாட்டினர்.


இந்த நிலையில், தலைமை ஆசிரியர் மீது முறைப்பாடு அளித்த 11 நாட்களுக்கு பிறகு பரீட்சை எழுதுவதற்காக நஸ்ரத் ஜகான் ரபி பாடசாலைக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரின் தோழி ஒருவர், அவரை பாடசாலைக்கூடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார்.


அங்கு நின்றிருந்த 5 பேர் நஸ்ரத் ஜகான் ரபியை சூழ்ந்து கொண்டு தலைமை ஆசிரியர் மீதான முறைப்பாட்டை வாபஸ் பெறும்படி மிரட்டினர். அதனை ஏற்க மறுத்ததால் அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து, பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த விவகாரம் வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலந்பிந்துனுவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிவலாக்குளம் ஸ்ரீ சீவலி ரஜ மஹா விகாரையில் மிக நீண்டகால தேவையாக காணப்பட்ட பிக்குகள் தங்கும் வீட்டினை அமைப்பதற்கு கம்பெரலிய செயற்றிட்டத்தின் மூலம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் ஐக்கிய தேசிய கட்சியின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் நடப்பட்டது.

குறித்த நிகழ்வோடு அப்பிரதேசத்தில் இயங்கி வரும் விசேட தேவையுடையை பிள்ளைகளுக்காய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதுவருட கொண்டாட்ட நிகழ்விலும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார்.


இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நீர், மலை, மழை, வெயில், காடு என சகல வளங்களும் நிறைந்து காணப்படும் நம் நாடு ஏன் இன்னும் முன்னேறவில்லை? இவற்றுக்கு முழுக் காரணமும் எமது நாட்டை ஆளும் அரசியல் வாதிகளே. அன்று DS.சேனாநாயக்க, சேர்.அருணாசலம் பொன்னம்பலம், ராசிக் பரீட் ஆகியோர் நமது நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கையில் ஒரு சதமேனும் கடனற்ற நாடாக காணப்பட்ட நம் நாடு இன்று 8500 பில்லியன் ரூபாய்கள் கடன் நிறைந்த நாடாக காணப்படுகின்றது. நிலைமை இவ்வாறே செல்லுமானால் இன்னும் சில நாட்களில் வெறும் பூமி மட்டுமே நம் சந்ததிகளுக்கு மீதமாகும்.

இவ்வளவு வளமும் நிறைந்த நாட்டில் மின்சார பிரச்சினைக்கு நாம் முகம் கொடுத்து வருகின்றோம். இந்நிலைமை குறித்து முன்னாள் மின்வலு சக்தி அமைச்சர் வெட்கப்படவேண்டும். அவர் அன்று ஆடைகளுக்கு நடுவில் கை வைத்துக்கொண்டு உறங்கிக்கிடந்தார். அன்று அவர் இந்த நாட்டிற்கு மாபெரும் சாபக்கேடாக அமைந்தார். அவருடன் பாராளுமன்றில் இருக்கும் ஓர் மந்திரியாக நானும் வெட்கப்படுகின்றேன். அவர் இவற்றுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு நம் நாட்டை பின்தங்கிய நிலைமைக்கு தள்ளிச்செல்லும் அரசியல்வாதிகள் நம் நாட்டில் காணப்படும்போது நம் நாடு எவ்வாறு முன்னேற்றத்தை காணும் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.


இனி வரும் காலங்களிலாவது இன, மத, குல பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்று பட்டால் மாத்திரமே நம் நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்ல முடியும் என்பதனை நாம் அனைவரும் புரிந்து செயல்படவேண்டும். என தெரிவித்தார்,


ஐ.எம்.மிதுன் கான்
கனேவல்பொல

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget